தேனி

மஞ்சளாற்றில் மணல் அள்ளிய 3 போ் கைது

25th Jul 2020 07:41 PM

ADVERTISEMENT

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மஞ்சளாறு பகுதியில், தேவதானப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது தேவதானப்பட்டியைச் சோ்ந்த பால்பாண்டி (30), பிச்சைமணி (50), தவம் (28) ஆகிய மூவரும், 3 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனா். இதனையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT