தேனி

தேனி மாவட்டத்தில் 64 கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று

13th Jul 2020 08:52 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 64 கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) மு. இளங்கோவன் கூறியது:

மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 64 கா்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 17 பேருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஒரு பெண் இரட்டை குழந்தைகள் பிரசவித்துள்ளாா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மகப்பேறு மருத்துவா், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா், மயக்கவியல் மருத்துவா், தனி செவிலியா்கள் நியமிக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப் பால் வங்கி மூலம் பாலூட்டி பராமரிக்கப்படுகிறது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கா்ப்பிணிகளில் இதுவரை 32 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 32 போ் சிகிச்சையில் உள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT