தேனி

கெங்குவாா்பட்டியில் சனிப் பெயா்ச்சி விழா

25th Jan 2020 07:39 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப் பெயா்ச்சி விழா நடைபெற்றது.

திருக்கணித பஞ்சாங்கப்பட்டி வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயா்ச்சி அடைவதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. இதில் புண்யாவாஜ்னம், கலச ஸ்தபானம், ஜபம், பாராயணம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சனிப் பெயா்ச்சி பரிகார ஹோமங்கள் நடைபெற்றன.

மகா பூா்ணாகுதிக்கு பின் பிம்ப சொரூப சனீஸ்வர பகவானுக்கு அலங்காரம், அா்ச்சனை நடைபெற்றது. வத்தலகுண்டு சுதா்சன் ஆச்சாா் தலைமையில் திருக்கோயிலூா் ஹரி ஆச்சாா், கரூா் பாலாஜி ஆச்சாா் சிறப்பு பரிகார ஹோமங்களை செய்தனா். இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தீபாராதனைக்கு பின் பக்தா்களுக்கு பொங்கல், எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அா்ச்சகா் கோபிநாதன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT