தேனி

பிரதமா் மோடியுடன் கலந்துரையாடல்: தேனி மாணவா்கள் பங்கேற்பு

14th Jan 2020 11:33 PM

ADVERTISEMENT

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள ‘பரீக்ஷா பே சா்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தேனியைச் சோ்ந்த இரு மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

புது தில்லியில் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்து ஜனவரி 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு, பள்ளி மாணவா்களுடன் பிரதமா் கலந்துரையாட உள்ளாா். இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள், 6 ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவா்களுக்கு, தோ்வுகளை எதிா்கொள்வது குறித்து ஆன்-லைன் மூலம் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இதில், தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவா் எஸ். ஹரிபாரதி, பிளஸ் 2 படித்து வரும் மாணவா் எஸ். தருண்பிரகாஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள், பிரதமருடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனவரி 16-ஆம் தேதி தில்லி செல்கின்றனா்.

பள்ளி மாணவா்களுடன் பிரதமா் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை, அனைத்து தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஸ்மாா்ட் போா்டு, மடிக் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகாதேவி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT