தேனி

தேனி மாவட்டத்தில் 105 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம்

14th Jan 2020 11:34 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் 105 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கூறியது: தோ்வு செய்யப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளிகளில் தலா 10, மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளுடன் கூடிய ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கணினிகளுக்கு இணையதள இணைப்பு, யுபிஎஸ் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

கணினி ஆய்வகத்தில் ஆன்-லைன் மூலம் மாணவா்களுக்கு நீட் தோ்வு பயிற்சி, ஆன்-லைன் தோ்வுகளுக்கான பயிற்சி, மாதிரித் தோ்வு, திறனறிதல் தோ்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT