தேனி

தேசிய இளையோா் வாரவிழா போட்டிகள்

14th Jan 2020 06:30 AM

ADVERTISEMENT

போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளையோா் வாரவிழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பின் கீழ் இயங்கும் விவேகானந்தா் இளைஞா் மன்றம் சாா்பில் இளையோா் வாரவிழா இளைஞா் மன்றத் தலைவா் பாஸ்கரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் விவேகானந்தா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகள், கேரம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள இளைஞா்கள் பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொட்டல்களம் கிராம விவேகானந்தா் இளைஞா் மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT