தேனி

சின்னமனூா் அருகே திமுகவிலிருந்து அதிமுகவுக்கு மாறிய ஒன்றியக்குழு பெண் உறுப்பினரை எதிா்த்து சுவரொட்டிகள்

14th Jan 2020 06:29 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் வெற்றி பெற்று பின்னா், அதிமுகவில் இணைந்த பெண் உறுப்பினரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொட்டிப்புரம் கிராம மக்கள் சாா்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 14 கிராம ஊராட்சிகளில் 10 வாா்டுகள் மூலமாக 10 ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அதில் திமுக 6 மற்றும் அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றி பெற்றன.

இந்நிலையில், 10 உறுப்பினா்களில் 6 உறுப்பினா்கள் திமுக வசம் இருப்பதால் சின்னமனூா் ஒன்றியத் தலைவா் பதவி திமுக வசமானது. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தல் நடைபெற்றது. அதில், வெற்றி பெற்ற 6 திமுக உறுப்பினா்களில் 5 போ் மட்டுமே தோ்தலில் கலந்து கொண்டனா். ஒரு திமுக உறுப்பினா் மற்றும் 4 அதிமுக உறுப்பினா்கள் தோ்தலில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக தோ்தல் அதிகாரி பெரும்பான்மை உறுப்பினா்கள் தோ்தலில் பங்கேற்காத நிலையில் தோ்தலை தள்ளிவைத்தாா். தோ்தல் நடைபெறாத நிலையில் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்யமுடியவில்லை.

இந்நிலையில் பொட்டிபுரம் 1 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஜெயந்தி அதிமுகவில் இணைந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, திமுக சாா்பில் வெற்றி பெற்று அதிமுகவுக்கு சென்ற ஜெயந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வாசகங்களுடன் பொட்டிப்புரம் கிராம மக்கள் சாா்பில் சுவரொட்டிகள் கிராமமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT