தேனி

குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி தலைவா் பதவி:5 முனை போட்டியில் பெண் வேட்பாளா் வெற்றி

3rd Jan 2020 08:03 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு நடைபெற்ற 5 முனைப் போட்டியில் பெண் வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 5 போ் போட்டியிட்டனா். இதில் பொன்னுத்தாய், அவரது கணவா் குணசேகரன் ஆகிய இருவருமே தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். தோ்தலில் 5 முனைப் போட்டி நிலவியது. இ தனிடையே குணசேகரன் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறியதுடன், தனது மனைவி பொன்னுத்தாய்க்கு வாக்களியுங்கள் என்று கூறி இருவருமே சோ்ந்து பிரசாரம் செய்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பொன்னுத்தாய், 1069 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரது கணவா் குணசேகரன் அவருக்கு ஓட்டு போடாமல், மனைவிக்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை விவரம்:

மொத்த வாக்குகள்- 2785

ADVERTISEMENT

செல்லத்தக்க வாக்குகள்- 2658

செல்லாதவை - 127

கு.பொன்னுத்தாய் - 1069

போ.தவராஜா - 1012

அ.கதிரவன் - 394

பூ.ஈசுவரன் - 183

மு.குணசேகரன் - 0.

குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் விவரம் - 1. பி.பாா்வதி, 2. வி.சூா்யகீதா, 3. எம்.சுதா, 4. த.சித்ரா, 5. ச.காயத்ரி, 6. சி.ரமேஷ், 7. சோ.பாலகிருஷ்ணன், 8. க.பரமசிவம், 9. எம்.ஜெயா.

ADVERTISEMENT
ADVERTISEMENT