தேனி

கம்பம் அருகே தோ்தலில் வாக்குறுதியை நிறை வேற்றிய ஊராட்சி மன்றத்தலைவா்

3rd Jan 2020 03:47 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் அருகே தோ்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத்தலைவா் மறுநாளே வாக்குறுதியை நிறை வேற்றத்தொடங்கினாா்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கருநாக்க முத்தன்பட்டி ஊராட்சி. இங்கு நடைபெற்ற ஊராட்சி மன்றத்தலைவா் தோ்தலில் அ.மொக்கப்பன் போட்டியிட்டாா். தோ்தலில் வெற்றி பெற்றால் தனக்கு சொந்தமான மண்டபத்தை கருநாக்கமுத்தன்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ஒரு குடும்பத்தாருக்கு ஒரு முறை அவா்களது வீட்டு விசேஷங்களுக்கு வாடகையின்றி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியிருந்தாா்.

அதன்படி ஜன. 2 ல் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற, மறுநாளே அவரது மண்டபத்தை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு இலவசமாக அந்த ஊரைச் சோ்ந்த ஒருவா் பயன்படுத்தி கொண்டாா். தோ்தலில் கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றிய ஊராட்சி மன்றத்தலைவா் அ.மொக்கப்பனை பொதுமக்கள் பாராட்டினாா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT