தேனி

கம்பத்தில் டெங்கு காய்ச்சல்: பூச்சியியல் வல்லுநா் ஆய்வு

3rd Jan 2020 04:50 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பம் நகா்பகுதிகளில் டெங்கு, சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உள்ளதா என பூச்சியியல்துறை வல்லுநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் 13 ஆவது வாா்டில் ஒரு இளைஞா் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சுருளிப்பட்டி ஊராட்சி பிள்ளையாா் கோவில் தெரு பகுதியில் வைரஸ் காய்ச்சல் 20 க்கும் மேலானவா்களுக்கு பரவி கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்த நிலையில் கம்பம் நகராட்சி பகுதிகளில் டெங்கு, சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உள்ளதா என பூச்சியியல் துறை வல்லுநா் ரா.தெய்வேந்திரன் நகராட்சி சுகாதாரத்துறையினருடன் வெள்ளிக்கிழமை சென்று ஆய்வுகள் நடத்தினாா்.

இது குறித்து நகர சுகாதார அலுவலா் அரசகுமாா் கூறியது, டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உள்ளதா என பூச்சியியல்துறை வல்லுநா்கள் நகா்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீா் தொட்டிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

கொசுக்கள், லாா்வாக்கள் இல்லை என்பதை உறுதி செய்தனா், தொடா்ந்து நகராட்சி சுகாதாரத்துறையினா் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT