தேனி

வைகை அணை, கடமலைக்குண்டுபகுதிகளில் இன்று மின்தடை

29th Feb 2020 12:33 AM

ADVERTISEMENT

பெரியகுளம்: வைகை அணை மற்றும் கடமலைக்குண்டு பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு மின்வாரியத்தின் பெரியகுளம் மின்பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரியகுளம் கோட்டப் பராமரிப்பிலுள்ள வைகை அணை மற்றும் கடமலைக்குண்டு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் வைகை அணை, ஜம்புலிபுத்தூா், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT