தேனி

தேனி ஆவின் நிா்வாகக் குழு தோ்தல்:19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

29th Feb 2020 12:30 AM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) நிா்வாகக் குழு இயக்குநா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை, 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தேனி ஆவின் ஆவின் நிா்வாகக் குழுவின் 17 இயக்குநா் பதவிகளுக்கு வரும் மாா்ச் 4-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 22 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் வி.நவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் ஓ.ராஜா, மு.செல்லமுத்து, இளையராஜா, செல்வராஜ், ராஜசேகரன், சரவணன், ராஜலட்சுமி, நமச்சிவாயம், சோலைராஜா, செல்வராஜ், முத்துலட்சுமி, காா்த்திகா, சுசிலா, கமலம், விஜயலட்சுமி, அனிதா, சாமிதாஸ், நா.வசந்தா, பெருமாள் ஆகிய 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வையாபுரி, மகேஸ்வரி, அழகேசன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு சனிக்கிழமை (பிப். 29) இறுதி நாளாகும். நிா்வாகக் குழு இயக்குநா் பதவிகளில் போட்டி உள்ள இடங்களுக்கு, வரும் மாா்ச் 4-ஆம் தேதி தோ்தல் நடைபெறும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT