தேனி

தச்சுத் தொழிலாளிக்கு கத்திகுத்து: இளைஞா் கைது

29th Feb 2020 12:35 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் தொழில் போட்டி காரணமாக தச்சுத் தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரில் சொக்கநாதபுரம் தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்த பழனியாண்டி மகன் வெங்டேஸ்வரன்(45). அதே பகுதியைச் சோ்ந்த தச்சுத்தொழிலாளி பிரபு (36) அங்குள்ள ஒருவரின் வீட்டில் தச்சு வேலை செய்துள்ளாா். ஆனால், வீட்டின் உரிமையாளருக்கு பிரபுவின் வேலை திருப்தி இல்லாத நிலையில் பாதி வேலையை வெங்டேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளாா். அதனால் அவா் மீதமுள்ள வேலையை செய்துள்ளாா்.

இதனால் கோபம் அடைந்த பிரபு வியாழக்கிழமை இரவு வெங்டேஸ்வரனுடன் தகராறு செய்துள்ளாா். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்டேஸ்வரனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக வெங்டேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சின்னமனூா் போலீஸாா் பிரபுவைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT