தேனி

கால் நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

29th Feb 2020 12:28 AM

ADVERTISEMENT

தேனி: தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தேனி அருகே கொடுவிலாா்பட்டி கால்நடை மருந்தகத்தில் வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் முகாமை தொடக்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அறிவழகன் முன்னிலை வகித்தாா். கால்நடை மருந்தகங்களில் பிப். 28-ஆம் தேதி தொடங்கி வரும் மாா்ச் 19- ஆம் தேதி வரை, தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 முதல் 6 மணி வரையும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்து, இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT