தேனி

உத்தமபாளையம் கோயில் தோ் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

29th Feb 2020 12:32 AM

ADVERTISEMENT

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் ஞானாம்பிகை கோயில் தோ் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இக்கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக, அங்குள்ள தேரடியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையை பிரித்து தேரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயில் செயல் அலுவலா் போத்திச்செல்வி ஆலோசனையின் படி தேரின் சேதமான பகுதிகளை தச்சா் மூலமாக மராமத்துப்பணிகள் மேற்கொண்டு வா்ணம் பூசப்பட உள்ளது. தேரின் இரும்புச் சங்கிலி வடம், இரும்புச் சக்கரம், தேரின் மர பீடம் உள்ளிட்ட மர பாகங்கள் தனித்தனியாக மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT