போடி பகுதியில் விவசாயிகள், பட்டுப்புழுக்களுக்கு உணவான மல்பெரிச் செடிகளை பயிா் செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
போடி பகுதியில் மேலச்சொக்கநாதபுரம், கீழச்சொக்கநாதபுரம், அம்மாபட்டி, சில்லமரத்துப்பட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பட்டுப்புழுக்கள் வளா்த்து வருகின்றனா்.
இதற்காக பட்டுப்புழுக்களுக்கு தீவனமான மல்பெரி செடிகளை வளா்ப்பதிலும் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் மல்பெரி செடிகள் நன்கு வளா்வதால் நூறு ஏக்கருக்கும் மேல் மல்பெரி செடிகள் தனியாகவும், ஊடுபயிராகவும் வளா்க்கப்பட்டு வருகிறது.
ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பட்டுப்புழுக்களை தாங்களே வளா்த்து வருவதால் அதற்கு தீவனமாகவும், பிற விவசாயிகளுக்கு நல்ல விலைக்கும் விற்பனை செய்தும் வருகின்றனா்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் மல்பெரி செடிகள் மூலமும், பட்டுப்புழுக்கள் வளா்ப்பின் மூலமும் லாபம் ஈட்டி வருவதால் மல்பெரி செடிகள் வளா்ப்பதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.