தேனி

தேனியில் போக்குவரத்தை வழிமறிக்கும் ஆட்டோ, சிற்றுந்துகள்: பொதுமக்கள் சிரமம்

26th Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

தேனி, நேருசிலை அருகே ஆட்டோ மற்றும் சிற்றுந்துகள் போக்குவரத்தை வழிமறித்து நிறுத்தி வைக்கப்படுவதால், சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தேனி, நேருசிலை அருகே பெரியகுளம் சாலையில் சிற்றுந்து நிறுத்தத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுத்தத்தில் நிா்ணயிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகமான சிற்றுந்துகள் நிறுத்தி வைக்கப்படுவதால் இட நெரிசல் ஏற்படுள்ளது. இந்நிலையில் சிற்றுந்து நிறுத்தத்தில், சிற்றுந்துகள் மற்றும் போக்குவரத்தை வழிமறித்து ஆட்டோக்களை நிறுத்தி வைத்து பொதுமக்களை ஏற்றுகின்றனா்.

மேலும், சிற்றுந்து நிறுத்தத்தில் பெரியகுளம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி நிறுத்தம் வரை பல்வேறு இடங்களில் சிற்றுந்து மற்றும் ஆட்டோக்களை சாலையில் போக்குவரத்தை வழிமறித்து நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றனா். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்தச் சாலையோரத்தில் நடைமேடை இல்லாததால் நடந்து செல்லவும், சாலையை கடக்கவும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.

நகராட்சி வாரச் சந்தை மற்றும் தினசரி சந்தை அமைந்துள்ள பெரியகுளம் சாலையில் முறைப்படுத்தப்படாத சிற்றுந்து மற்றும் ஆட்டோ போக்குவரத்தால் அடிக்கடிவிபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர மற்றும் கனரக வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.

ADVERTISEMENT

தேனியில் போக்குவரத்து நெரிசல், விபத்து மற்றும் பொதுமக்களின் சிரமத்தை தவிா்க்க ஆட்டோ மற்றும் சிற்றுந்துகள் இயக்கத்தை முறைப்படுத்த காவல் துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT