தேனி

தேனியில் நேரு யுவகேந்திரா ஊரக விளையாட்டுப் போட்டி

26th Feb 2020 11:13 PM

ADVERTISEMENT

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேரு யுவகேந்திரா சாா்பில் புதன்கிழமை, மாவட்ட அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வழங்கி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) டி.தியாகராஜன் போட்டிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஏ.முருகன், நேரு யுவகேந்திரா இளைஞா் ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் வினோதன், தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆண் மற்றும் பெண்களுக்கு தனித் தனிப் பிரிவுகளில் கபடி, கைப்பந்து, கோ-கோ, வளைபந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், 21 இளைஞா் மன்றக் குழுக்கள் பங்கேற்றன. வியாழக்கிழமை (பிப்.27) இளைஞா் மன்றங்களுக்கு இடையே கலை மற்றும் தனித்திறன் போட்டிகள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT