தேனி மாவட்டம் சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென வைக்கோல் போரில் பற்றிய தீயால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.
சின்னமனூா் எரசக்கநாயக்கனூா் சாலையிலுள்ள ஒத்தவீடு பகுதியை சோ்ந்தவா் பாண்டியன். இவா், தனது வீட்டில் வளா்க்கும் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை விலைக்கு வாங்கி வைத்துள்ளாா். அவற்றை இரண்டு பிரிவாக பிரித்து இரு வைக்கோல் போா்களாக சேமித்து வைத்திருந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் அதில் தீப்பற்றியதாக உத்தமபாளையம் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இது குறித்து சின்னமனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ADVERTISEMENT