தேனி

உத்தமபாளையம் கல்லூரி மாணவா்கள் கலை, இலக்கிய போட்டியில் 2 ஆம் இடம்

26th Feb 2020 11:12 PM

ADVERTISEMENT

மதுரை கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரியில் நடைபெற்ற கலை , இலக்கியப் போட்டிகளில், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி மாணவ, மாணவிகள் 2 ஆம் இடம் பெற்றனா்.

மதுரை காமராஜா் பல்கலை கழக கல்லூரிகளுக்கிடையோன கலை , இலக்கிய பிரிவுகளில் பல போட்டிகள் கருமாத்தூா் அருளானந்தா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 2 ஆம் இடம் பெற்றனா். போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு புதன் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி ஆட்சிக்குழு செயலா் தா்வேஷ்முகைதீன், தலைவா் செந்தில் மீரான், கல்லூரி முதல்வா் முகமது மீரான் , உடற்கல்வி இயக்குநா் அக்பா் அலி உள்ளிட்ட பேராசிரியா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT