தேனி

ஆண்டிபட்டி அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு

26th Feb 2020 07:34 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செவ்வாய்கிழமை கிணற்றில் மிதந்த பெண் பிணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டியை அடுத்த திம்மரசநாயக்கனுாா் அருகே மதுரை சாலையை ஒட்டி உள்ள விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினா் உதவியுடன் போலீஸாா் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்து கிடந்த பெண்ணிற்கு 55 வயது இருக்கும் என்றும் அடா் சிவப்பு நிறத்தில் ரவிக்கை, நீல நிற கோடு போட்ட சேலை அணிந்திருந்தாா், உடலில் காயங்கள் ஏதும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT