தேனி

போடி வனப்பகுதியில் காட்டுத் தீ: வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

25th Feb 2020 05:38 PM

ADVERTISEMENT

போடி வனப்பகுதியில் காட்டுத் தீப்பற்றுவது தொடங்கியுள்ள நிலையில், வனத்துறையினா் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கொழுக்குமலை ஒத்தைமரம் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 23 போ் கருகி உயிரிழந்தனா். அதன் இரண்டாமாண்டு நினைவு தினம் மாா்ச் மாதம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், மேற்கு தொடா்ச்சி மலையில் ராசிங்காபுரம் கிராமத்திற்கு மேற்கே உள்ள வனப்பகுதியில் திங்கள்கிழமை சில இடங்களில் காட்டுத் தீப் பற்றியது. இதில் மரங்கள் எரிந்து நாசமடைந்ததுடன், வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன.

வனத்துறையினா் இப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதேபோல் சாக்குலத்து வனப்பகுதி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளிலும் காட்டுத் தீப் பற்றியது. வனத்துறையினா் போராடி தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

விவசாய நிலங்களை விரிவுபடுத்தவும், வனப்பகுதியில் மரங்களை வெட்டி மரக்கரி தயாரிக்கவும் தீ வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் புகைபிடிக்கும் நபா்களாலும் வனப்பகுதியில் தீப் பற்றுகிறது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு, மரங்களும் எரிந்து நாசமடைகிறது.

இந்த ஆண்டு வனப்பகுதியில் காட்டுத் தீ சம்பவங்களைத் தடுக்க வனத்துறை அலுவலா்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வனப்பகுதியில் ரோந்து செல்வதுடன், தீப் பிடித்தவுடன் உடனுக்குடன் அணைப்பதற்கு குழுக்கள் அமைத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT