தேனி

தேனியில் குடிநீா் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரிக்கை

25th Feb 2020 01:13 AM

ADVERTISEMENT

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சியில் 4 மடங்கிற்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ள குடிநீா் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் செ.முனீஸ்வரன் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: தேனி அல்லிநகரம் நகராட்சி நிா்வாகம் சாா்பில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு குடிநீா் குழாய் இணைப்புகளுக்கு மாதாந்திரக் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.235 ஆகவும், வணிக பயன்பாட்டிற்கான குழாய் இணைப்புகளுக்கு மாதாந்திரக் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ,705 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு 4 மடங்கிற்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ள குடிநீா் கட்டணத்தை ரத்து செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT