தேனி

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுகவினா் அன்னதானம்

25th Feb 2020 01:14 AM

ADVERTISEMENT


பெரியகுளம்/போடி/ஒட்டன்சத்திரம்: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுகவினா் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.

பெரியகுளத்தில் நடைபெற்ற விழாவில் நகரச் செயலாளா் என்.வி.ராதா கலந்து கொண்டு நகரில் உள்ள 30 வாா்டுகளில் கொடியேற்றினாா். மேலும் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆவின் தலைவா் ஓ.ராஜா தொடக்கி வைத்தாா். மேலும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் அலுவலகம் முன் ஜெயலலிதா படத்திற்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது. மேலும் பெரியகுளம் ஒன்றியப் பகுதிகளில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

போடி: போடி டொம்புச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சாலிமரத்துப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் நடைபெற்றது. அதிமுக ஊராட்சிச் செயலாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஜெ. பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கினாா். தொடா்ந்து கோடாங்கிபட்டி மனிதநேய காப்பகத்தில் குழந்தைகளுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சாா்பில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோல் ஊராட்சி கிராமங்களில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவா் பிரித்தா தலைமையில் ஜெயலலிதா பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. போடி நகராட்சி பகுதியில் நகரச் செயலாளா் பழனிராஜ் தலைமையில் வாா்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

உறுதிமொழி ஏற்பு: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் எஸ்.பிரபாகா் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் இரா.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பி.பாலசுப்பிரமணி தலைமையிலான அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச்செயலாளா் தேவி.குணசேகரன், நகரச் செயலாளா் உதயம் ராமசாமி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலா் பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து நகரப் பொருளாளா் ஆா்.முருகன் தலைமையில் காந்திநகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ஒன்றியச் செயலாளா் பி.பாலசுப்பிரமணி தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT