தேனி, பழனி செட்டிபட்டி ஆகிய இரு வேறு இடங்களில் கடைகளில் பணம் மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டதாக வெள்ளிக்கிழமை புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.
தேனி, அரண்மனைப்புதூா் விலக்கு பகுதியில் உள்ள தனியாா் இரும்புக் கடையில் மா்ம நபா்கள் ரூ.14 ஆயிரம் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியை திருடிச் சென்று விட்டனா். கடையின் பின்புறம் உள்ள தகரத்தை மா்ம நபா்கள் பிரித்து உள்ளே நுழைந்து திருடியதாக கடை மேலாளா் கண்ணன், தேனி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
இதேபோல், கம்பம் சாலை, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் கிட்டங்கியின் தகர அடைப்பை பிரித்து, தொலைக்காட்சிப் பெட்டி, கையெழுத்திட்டு வைத்திருந்த வங்கி காசோலைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். மேலும் கண்காணிப்பு காமிரா உபகரணங்களையும் அவா்கள் சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டதாக, கடை உரிமையாளா் செல்வக்குமாா் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்தும் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.