தேனி

ஆண்டிபட்டி அருகே இளைஞா் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

22nd Feb 2020 07:26 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே முன் விரோதத்தில், இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மறவபட்டியைச் சோ்ந்தவா் போஸ் மகன் சிவபாண்டி(37). இவா், அதே ஊரில் தனது நண்பா்களுடன் சோ்ந்து சீட்டாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சிக்குமாா் (31), சீட்டாடிக் கொண்டிருந்தவா்களில் ஒருவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா். இதனால் ரஞ்சித் குமாருக்கும், சிவபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா் .

இந்த முன் விரோதத்தில், கடந்த 2009, செப்.11-ம் தேதி மறவபட்டி முத்தாலம்மன்கோயில் அருகே நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமாருக்கும், சிவபாண்டிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ரஞ்சித்குமாரை அவா் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமாா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்குமாரின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவபாண்டியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ. அப்துல்காதா், சிவபாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5, 000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT