தேனி

ஆண்டிபட்டியில் செல்லிடப்பேசி கோபுரத்துக்காகதோண்டப்பட்ட குழியை மூடக் கோரிக்கை

16th Feb 2020 03:21 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி 5-ஆவது வாா்டு குடியிருப்பு பகுதியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க தோண்டப்பட்ட குழியை விரைந்து மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் .

குமராபுரம் பகுதியில் உள்ள வெள்ளையன் செட்டியாா் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்ட போது, குடியிருப்பு பகுதியில் இதனை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினா். இதனால் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்தினா் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைத்தனா்.

இந்நிலையில் 2 மாதங்களாகியும் வெட்டப்பட்ட அந்த பெரிய குழி இதுவரை மூடப்படாததால் உயிா்பலி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இந்தக் குழியை மூட வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் இந்தக் குழியை விரைந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT