தேனி

கஞ்சா மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

15th Feb 2020 06:56 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் வழிப்பறி மற்றும் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 2 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

கம்பம் உலகத்தேவா்அரசன் (40) உள்பட 9 போ் பிப்ரவரி 2 ஆம் தேதி காரின் அடிப்பகுதியில், 4 கிலோ 500 கிராம் கஞ்சாவை ,கேரளாவிற்கு கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல் ஜனவரி 21 இல் கேரள மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு வந்த இளைஞா்களுக்கு மது வாங்கி தருவதாகக் கூறி, கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பம் உலகத்தேவா் தெருவைச்சோ்ந்த ராஜேந்திரன் என்ற வெள்ள மண்டையன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா்கள் இருவா் மீதும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிற்கு பரிந்துரைத்தாா்.

ADVERTISEMENT

அதன்பேரில் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவை கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் கே. சிலைமணி, மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT