தேனி

தொழில் நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கு

13th Feb 2020 06:38 AM

ADVERTISEMENT

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் புதன்கிழமை, தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் கண்காட்சி, தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு கருத்தரங்கு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தொடக்கி வைத்தாா். பெரியகுளம் வருவாய் கோட்ட சாா்பு ஆட்சியா் டி.சினேகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) எஸ்.பாலச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் நடைபெற்ற அரசு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் படித்து தோ்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT