தேனி

கொடுவிலாா்பட்டியில் நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

13th Feb 2020 11:58 PM

ADVERTISEMENT

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சனிக்கிழமை (பிப். 15), காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் சென்னை, திருப்பூா், கோவை, மதுரை ஆகிய இடங்களில் செயல்படும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் தொழிற் பயிற்சிப் படிப்பு , பட்டப் படிப்பு வரை படித்த ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வோா் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT