தேனி

பாலிடெக்னிக் கல்லூரிகள் இடையே தடகளம்: சிவகாசி அணி முதலிடம்

6th Feb 2020 07:35 AM

ADVERTISEMENT

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி அணிகளுக்கு இடையே நடைபெற்ற மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில், சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் வென்றது.

கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்கிழமை (பிப்.4) மற்றும் புதன்கிழமை (பிப்.5) போட்டிகள் நடைபெற்றன. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், காரைக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஒட்டுமொத்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம், விருதுநகா் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லூரி அணி 2 ஆம் இடம், தேனி கம்மவாா் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி அணி 3 ஆம் இடம் பெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 2 இடங்களை பிடித்த விளையாட்டு வீரா்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT