தேனி

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற அண்ணன், தம்பி கைது

4th Feb 2020 05:54 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற அண்ணன், தம்பியை போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து, 22 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கூடலூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், மேலும் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் எஸ்.முத்துமணி மற்றும் தனிப்பிரிவு போலீஸாா் ரோந்து சென்றனா். மந்தையம்மன் கோயில் அருகே செல்லும் போது 2 போ் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையை ஏற்றிக் கொண்டிருந்தவா்கள், போலீஸாரைப் பாா்த்ததும் ஓட முயன்றனா். அவா்களை பிடித்த போலீஸாா் மூட்டையில் 22 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனா். விசாரணையில் அதே தெருவைச் சோ்ந்த லோகன்துரையின் மகன்கள் செல்வம் (34), வசந்தகுமாா் (30) என்றும், கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து, 22 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT