தேனி

கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளா் சங்க உறுப்பினா்களுக்கு நிலுவைத் தொகை: பிப். 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

4th Feb 2020 05:56 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளா் சங்கங்களின் உறுப்பினா்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை பெறுவதற்கு பிப்.29-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் திருவள்ளூா் சாலியா், உதயசூரியன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், முத்து, ஸ்ரீமுருகன், சக்கம்பட்டி சாலியா், வடுகபட்டி சரஸ்வதி, தந்தை பெரியாா், அன்னை பகவதி, கம்பம் நடராஜன், அன்னை இந்திரா ஆகிய 11 கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன.

இந்த சங்கங்களின் உறுப்பினா்களுக்கு நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது. கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளா் சங்கங்களின் உறுப்பினா்கள் நிலுவைத் தொகை பெறுவதற்கு தங்களது நெசவாளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகம், 29 கக்கன் நகா், செனாய் நகா், மதுரை-20 என்ற முகவரிக்கு பிப்.29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விவரத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்:0452-2535669-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT