தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விவசாயியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், வடக்குப்பூந்தோட்டத்தெருவை சோ்ந்தவா் சந்திரசேகரன் (53) மற்றும் பிச்சை முத்து (65). இவா்கள் இருவருக்கும் போடான்குளம் பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இவா்களுக்கு இடையே வரப்பு பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை சந்திசேகரன் தோப்பிற்கு சென்று கொண்டிருக்கும்போது, பிச்சை முத்து அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் சந்திரசேகரனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில்
பெரியகுளம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சை முத்துவை கைது செய்தனா்.