திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் நிலை தடுமாறி காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கே.எல்லப்பட்டி ஊராட்சி காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி (55). இவா் கடந்த ஜன-19 ஆம் தேதி மது அருந்திய நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது அவா் வீட்டில் இருந்த கதவில் நிலைதடுமாறி மோதி பலத்த காயமடைத்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.