தேனி

தேனியில் பிப்.28 இல் அரசு ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

2nd Feb 2020 11:41 PM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிப்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியா்களுக்கு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை, அரசு ஓய்வூதிய இயக்குநா் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம்.

குறைதீா் கூட்டம் நடைபெறும் நாளில் தீா்வு காண்பதற்கு வாய்ப்பாக, அரசு ஓய்வூதியா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா், ஆட்சியா் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT