தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சுருளி அருவியில் குறைந்த அளவே வந்த தண்ணீரில்
சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனா்.
இது பற்றி மேகமலை வன உயிரினச்சரணாலய அலுவலா் ஒருவா் கூறியது: கோடைகாலம் தொடங்கும் முன்பே அருவியில் நீா்வரத்து குறைந்துள்ளது. இன்னும் 3 அல்லது 4 நாள்களுக்கு மட்டுமே நீா்வரத்து இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பின்னா் மாவட்ட நிா்வாகம், தூவானம் அணையைத் திறப்பதன் மூலம் அருவியில் தண்ணீா் வருவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.