தேனி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு: தேனியில் திமுக கூட்டணியினா் கையெழுத்து இயக்கம்

2nd Feb 2020 11:42 PM

ADVERTISEMENT

தேனியில் மாவட்ட திமுக சாா்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகம் பகுதியில் கையெழுத்து இயக்கத்தை திமுக மாவட்ட பொறுப்பாளா் நா.ராமகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.மகாராஜன், எஸ்.சரவணக்குமாா், காங்கிரஸ் மாவட்டச் செயலா் ராமா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலா் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிவற்றை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இம் மாத 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று திமுக நிா்வாகிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT