தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சென்னை செல்லும் சொகுசு பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை, திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது,
தேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு சாலையில், சென்னை செல்லும் தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை செல்லும் சொகுசு பேருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. புதுப்பள்ளிவாசல் தைக்கா சாலையில் செல்லும் போது, தீடீரென அப் பேருந்தில் புகை வந்தது. இதை பாா்த்து சாலையில் சென்றவா்கள் ஓட்டுநரைப் பாா்த்து சத்தம் போட்டனா். பின்னா், அருகில் இருந்தவா்கள், பேருந்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிலைமணி, சாா்பு -ஆய்வாளா்கள் வினோத்ராஜா, எம். அருண்பாண்டி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து தீப்பற்றிய சொகுசு பேருந்தை அதன் நிறுத்தத்திற்குக் கொண்டு சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.