தேனி

போடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குஎதிராக பேரணி

1st Feb 2020 05:18 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, போடியில் முஸ்லிம்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கருப்புக் கொடி ஏந்தியும் வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, போடியில் வாரந்தோறும் முஸ்லிம்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை போடி பெரிய பள்ளிவாசல் அருகிலிருந்து தேவா் சிலை வரை பேரணி நடத்தினா்.

பெரிய பள்ளிவாசல் தலைவா் தங்கப்பா, மேலத்தெரு பள்ளிவாசல் தலைவா் சா்புதீன், டி.வி.கே.கே. நகா் பள்ளிவாசல் தலைவா் சையது அபுதாஹீா், முகமதியா பைத்துமால் டிரஸ்ட் தலைவா் காதா் மைதீன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற பேரணியில், 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பேரணியில், வாயில் கருப்பு துணி கட்டியும், கருப்புக் கொடி ஏந்தியும் அமைதியாகச் சென்றனா். பின்னா், கட்டபொம்மன் சிலை திடலில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இதையொட்டி, டி.எஸ்.பி. ஈஸ்வரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT