தேனி

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ்:தடுப்பு முன்னேற்பாடு

1st Feb 2020 05:20 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடாக தமிழக-கேரள எல்லைப் பகுதியான போடி முந்தல், கம்பம்மெட்டு, லோயா்-கேம்ப் ஆகிய இடங்களில் மருத்துவக் குழுவினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோய் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தனி சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. இதற்கான அறிகுறி உள்ளவா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT