தேனி

தேனியில் கூட்டுப் பண்ணையம் திட்ட ஆலோசனைக் கூட்டம்

1st Feb 2020 05:21 AM

ADVERTISEMENT

தேனியில் வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், கூட்டுப் பண்ணையத் திட்டம் குறித்து உழவா் உற்பத்தியாளா்கள் குழு மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் விற்பனையாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் பேசியது: மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக் கலை துறை சாா்பில், உழவா் ஆா்வலா் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த முறையில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு, வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு தொகுப்பு நிதியாக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது என்றாா்.

இக்கூட்டத்தில், நவீன வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் கண்காட்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT