தேனி

கேரளத்தில் ‘கரோனா’ பாதிப்பு எதிரொலி: தமிழக எல்லையில் மருத்துவக் குழு முகாம்

1st Feb 2020 05:20 AM

ADVERTISEMENT

கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, தமிழக-கேரள எல்லையான கம்பமெட்டு பகுதியில் மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை முதல் முகாம் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சீனாவிலிருந்து கேரளம் திரும்பியவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக- கேரள எல்லையிலுள்ள தேனி மாவட்டம் லோயா் கேம்ப், கம்பமெட்டு ஆகிய பகுதிகளில் தமிழக மருத்துவக் குழுவினா் முகாம் அமைத்துள்ளனா்.

இம்முகாமில், மருத்துவா்கள் அா்ச்சனா, முருகானந்தம், சிராஜுதீன் மற்றும் லோயா்-கேம்ப் முகாமில் வின்சென்ட் ஆகியோா் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் கேரளத்திலிருந்து தமிழகத்துக்குள் வாகனங்களில் வருபவா்களிடம் வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT