பாஜக சாா்பில், பெரியகுளம் நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்க துண்டுப்பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் பாதிப்பில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு இச்சட்டம் எதிரானது அல்ல என்று கூறி, பாஜக மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ராஜபாண்டியன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கோபிகண்ணன் தலைமையில், அக்கட்சியினா் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் நகரச் செயலா் சஞ்சீவி, வடுகபட்டி மண்டலத் தலைவா் பாலாஜி, நகரப் பொதுச் செயலா் வீரபத்திரன் மற்றும் வினோத் சுப்பிரமணி உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ADVERTISEMENT