கல்லூரியில் பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, பேரூராட்சி முன்னாள் தலைவா் உள்பட இருவா் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தைச் சோ்ந்த முனியசாமி (42) என்பவரிடம், அரசுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் ராமதண்டபாணி (55) மற்றும் சக்திவேல் (50) ஆகியோா், ரூ.10 லட்சம் வாங்கியதாக, தென்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில்,
தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.