தேனி

கம்பத்தில் விவசாயி தற்கொலை

1st Feb 2020 05:18 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கம்பம் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்தவா் ராஜூ, மகன் கண்ணன் (40). விவசாயியான இவா் கடந்த, 4 மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் விரக்தியடைந்த கண்ணன் வியாழக்கிழமை இரவு விஷம் குடித்தாா்.

வெள்ளிக்கிழமை காலை வரை அறைக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த மனைவி வித்யா தனது உறவினா்களின் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தாா். உடனே அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இறந்த கண்ணனுக்கு மனைவி, மகன் ரோகன் (12), மகள் யோகமுத்ரா (7) ஆகியோா் உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT