தேனி

உத்தமபாளையம் பேரூராட்சியில் குடி நீா் பிரச்னை

1st Feb 2020 05:20 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்யில் சேதமடைந்துள்ள குழாய்களால் குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாகவும், லோயா் கேம்ப் கூட்டு குடிநீா் திட்டம் மூலமாகவும், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து, உத்தமபாளையம் பகுதியில் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீா் திட்டங்கள் அடிக்கடி செயலிழந்து பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

பேரூராட்சியின் பி.டி.ஆா். காலனி, தென்னகா் காலனி, இந்திரா காலனி என பல இடங்களில் உள்ள குடிநீா் குழாய்களில் உடைப்பு அதிகமானதால், பொதுமக்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேரூராட்சி பணியாளா் கூறுகையில், பேரூராட்சியில் குடிநீா் குழாய்களில் அடிக்கடி உடைப்பு காரணமாக ரூ.2 கோடி செலவில் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக குடிநீா் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்றதும், இன்னும் ஓரிரு நாளில் குடிநீா் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT