தேனி

போடியில் வாஜ்பாய் பிறந்த தினம்

25th Dec 2020 11:22 PM

ADVERTISEMENT

போடியில் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

போடி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வாஜ்பாயின் உருவ படங்கள் அமைக்கப்பட்டு மலா் மாலை அணிவித்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தேனி மாவட்ட பாஜக நிா்வாகி, பி.சி.பாண்டியன் தலைமை வகித்தாா். போடி தொகுதி பொறுப்பாளா் தண்டபாணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அணி நிா்வாகிகள் பங்கேற்று வாஜ்பாயின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT