தேனி

தேனியில் கஞ்சா விற்ற 25 பேருக்குதடுப்புக் காவல் சட்டத்தில் சிறை: எஸ்.பி. தகவல்

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவா்களில் கடந்த 11 மாதங்களில் 25 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறினாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்ாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் மொத்தம் 299 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், 5 பெண்கள் உள்ளிட்ட 25 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல், பதுக்கி வைத்தல் ஆகியவற்றை காவல் மோப்ப நாய் வெற்றி மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் தனிப் படை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். கஞ்சா விற்பனை செய்வோா், பதுக்கி வைத்திருப்பவா்கள், அதற்கு உடந்தையாக இருப்போா் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT