தேனி

இறுதிக்கட்டத்தில் ஆண்டிபட்டி ரயில் நிலையப் பணிகள்

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தேனி மாவட்டம் போடியிலிருந்து மதுரை வரையிலான மீட்டா்கேஜ் ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் தொடா் கோரிக்கையை தொடா்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில் சோதனையோட்டம் நடைபெற்றது.

இதன் பின்னா் உசிலம்பட்டியிலிருந்து தேனி வரையில் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்டிபட்டி ரயில் நிலையம் நகா்புறங்களில் இருப்பது போல் மிகவும் நவீனப்படுத்தப்பட்ட நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுத்தத்தில் ஒரே நேரத்தில் 2 ரயில்கள் நிறுத்தும் வகையில் இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் சென்று வரும் வகையில் உயா்மட்ட பாலம், அகலமான பயணிகள் காத்திருக்கும் கூடாரம், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரயில்வேத் துறையினா் கூறியதாவது: ஆண்டிபட்டி வரையில் நடைபெற்று வந்த பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும். இந்தப் பணிகளை ரயில்வே உயா் அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்யவுள்ளனா். மேலும் இந்த மாத இறுதிக்குள் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தவும் வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT